தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முத்து அரங்கத்தில் வைத்து மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வருகை தந்தவர்களை சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பொற்செல்வன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ஐயா செந்தில்ராஜ் அவர்கள் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி பேரவை கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார் . இதில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும் “மாவட்ட சுகாதார பேரவை உறுப்பினருமான” முனைவர் எஸ் ஜே கென்னடி கலந்துகொண்டு கொரோனா காலத்தில் 2வது மற்றும் 3வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வந்த 4,13,487 பேருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தி தடுப்பூசி செலுத்துமாறு தனது மதர் சமூக சேவை நிறுவன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மூலம் முயற்சி எடுக்கப்பட்டது என்பதனை பதிவு செய்தார். தொடர்ந்து பல கருத்துக்களை எடுத்து கூறினார் . மேலும் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதியிலிருந்து மருத்துவர்கள் மக்கள் பிரதிகள் தங்கள் பகுதிகளின் தேவைகளையும் குறைகளையும் எடுத்துக் கூறினர்.


