ஆவின் சார்பில் COW MILK என்னும் புதிய வகை பால் பாக்கெட்டுகள் வரும் 01.03.2023 முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் டி.ஆர் தியானேஷ் பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் மூலம் எதிர்வரும் 01.03.2023 முதல் COW MILK (3.5/8.5) என்னும் புதிய வகை பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் கொழுப்பு சத்துக்கள் 3.5%, இதரச்சத்துகள். பால் அளவு 8.5% 500 மிலி. விலை ரூ.22.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இகு குறித்த விபரங்கள் அறிந்து கொள்ள ரெட்டியார்பட்டி சாலையில் அமைந்துள்ள நெல்லை ஆவின் அலுவலகத்திற்கு நேரடியாக வருமாறு ஆவின் பொது மேலாளர் டி.ஆர் தியானேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.


