தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேரில் பார்வையிட்டு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தேசிய B நெடுஞ்சாலை பகுதியில் ரமேஷ் மலர் கம்பெனி அருகில்- மதுரை பைபாஸ் ரோட்டில் ரூ.69.66 கோடி செலவில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும், ரூ.11.50 கோடி செலவில் தூர்வாரப்பட்டுள்ள சி.வா.நா. குளத்தையும், அந்த குளத்தின் கரையில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்றுவரும் நடைபாதை அமைக்கும் பணியையும் கூடுதல் தலைமைச் செயலாளர்/ வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர் நேரில் சென்று ஆய்வு பார்வையிட்டு மேற்கொண்டார்.


