தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
2023&2024 நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2005 படி 100 நாள் வேலை முழுவதும் வழங்க கோரியும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக 100 நாள் வேலையில் பதிவேடு பதிவு செய்ய வலியுறுத்தியும், அதிகமான மாற்றுத்திறனாளிகள் இருக்கும் கிராம பகுதியில் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணித்தள பொறுப்பாளராக நியமனம் செய்யவும், 4 மணி நேர வேலையை உத்தரவாதப்படுத்தவும், அரசு அறிவித்த ரூபாய் 1500 அனைவருக்கும் கிடைக்க வேண்டும் வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைளை வலியறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட குழு உறுப்பினர் கால்வாய் மணி மந்திரம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார். சுந்தர், நாகராஜ், கனகா லட்சுமி, பினிக்ஸ், பிரகாஷ் உள்பட கலந்து கொண்டனர்.


