கருங்குளம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தில் நாளை (21/02/2023) காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தில் நாளை நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடக்கிறது.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த முகாமினை தெற்கு காரசேரி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.மா.பேபி மாரியப்பன் துவக்கி வைக்கிறார்கள். இதில்
சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


