வல்லநாட்டில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தன்னார்வலர்கள் குழு, தொண்டர்குலம் மற்றும் சீடு-அறக்கட்டளை சித்த மருத்துவமனை சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் தன்னார்வலர்கள் குழு கௌரவ சட்ட ஆலோசகர் அன்பு அங்கப்பன், தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மருதூர் ராமசுப்பிரமணியன் சீடு-அறக்கட்டளை தலைமை அறங்காவலர்கள் சிவராமகிருஷ்ணன், பொன்னம்பலம், ராஜாசங்கர், முறப்பநாடு காவல் சார்பு ஆய்வாளர்கள் அந்தோணிராஜ், அருள்ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையம் உதவி மருத்துவ அலுவலர், செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் பேச்சியம்மாள் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில், சர்க்கரை நோய், ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த கொதிப்பு, மூலம், பவுத்திரம், கர்ப்பபைக் கோளாறுகள், நாட்பட்ட தோல் நோய்கள், வாத நோய்கள், மூட்டுவலி, உடல் பருமன், தீராத தலைவலி, வயிற்றுப்புண், நரம்புதளர்ச்சி, ஹார்மோன் குறைபாடுகள், தீராத சளி, இருமல், ஆஸ்துமா, சிறுநீரக கல்லடைப்பு, தூக்கமின்மை, போன்ற சித்த மருத்துவர்களால் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 1957 யுவகேந்திரா பார்வர்ட் பிளாக் மூத்த தலைவர் மருதுபாண்டியன், திருச்செந்தூர் தேவஸ்தான மடம் காப்பாளர் மாடசாமி, முறப்பநாடு காவல் நிலையம் தனிப்பிரிவு காவலர் மகாலிங்கம், அய்யம்பெருமாள், பழனிச்சாமி, கொம்பையா, பாலசுந்தர விநாயகம், பூல்பாண்டி, கந்தன், முத்துவேல், சுப்பிரமணியன், தம்பான், சிதம்பரம், ஜோதி, கல்லத்தியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


