இந்திய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் தூத்துக்குடி ஸ்மார்ட் டென்னிஸ் அகடமி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இந்திய அளவிலான AITA டென்னிஸ் போட்டிகள் தூத்துக்குடி கேம்ஸ் வில்லியில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் (டேலண்ட் சீரிஸ் 7) 11.02.2023 முதல் 17.02.2023 வரை நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். ஓற்றையர் பிரிவில் இறுதிச் சுற்றில் நாகர்போவிலை சேர்ந்த அர்ஷித் து ஜெனிஸ் மற்றும் தூத்துக்குடி ஸ்ரீ விஷ்வ சஞ்ஜித் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர் BMC பள்ளியில் ஸ்மார்ட் டென்னிஸ் அகடமியில் பயிற்சி பெறும் கமாக் பள்ளி மாணவர் ஆவர்.
மகளிருக்கான இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றில் கரூர் தியா சவிக்குமார், பெங்களூர் ஸ்ருஷ்டிகா ஜோடியும், தூத்துக்குடி ஹர்ஷினி, தூத்துக்குடி லஷ்மி சஹானா ஜோடியும் மோதினார்கள். இதில் ஹர்ஷினி மற்றும் லஷ்மி சஹானா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றது. இதில் ஹர்ஷினி BMC பள்ளியின் ஸ்மார்ட் டென்னிஸ் அகடமியில் பயிற்சி பெறும் அழகர் பப்ளிக் பள்ளி மாணவி ஆவார். இவர் மேலும் ஒற்றையர் பிரிவில் 3வது இடத்தையும் பெற்றுள்ளார்.
போட்டிகளின் இறுதியில் டாக்டர். மோஹைதின் பாதுஷா வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கினார். வெற்றி பெற்ற ஸ்மார்ட் டென்னிஸ் அகடாமி வீரர்களை அகடமியின் ஆலோசகரும் பள்ளியின் தாளாளருமான டாக்டர். ஜோசப் ஜான் கென்னடி அவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்திட வாழ்த்தினார்கள்.


