மதுபாலா இயற்பெயர்: மும்தாஜ் ஜெஹான் பேகம் தெஹ்லவி; 14 பிப்ரவரி 1933 – 23 பிப்ரவரி 1969) இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த ஓர் இந்திய நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பொழுதுபோக்காளர்களில் ஒருவராக இருந்தார். 20 ஆண்டுகளுக்கும் திரைவாழ்க்கையில் 1969 இல் இறக்கும் வரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தில்லியில் பிறந்து வளர்ந்த மதுபாலா, தனது 8வது வயதில் குடும்பத்துடன் மும்பைக்குக் குடிபெயர்ந்தார், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1940களின் பிற்பகுதியில் முன்னணிக் கதாப்பாத்திரங்களில் நடித்தார். மேலும், நீல் கமல் மற்றும் அமர் (1954), திகில் படமான மஹால் , மற்றும் காதல் திரைப்படங்களான பாதல் (1951) மற்றும் தாரணா ஆகிய திரைப்படங்களின் வெற்றி மூலம் பரவலாக அறியப்பட்டார். ஒரு சிறிய பின்னடைவைத் தொடர்ந்து, ஹவுரா பிரிட்ஜ் மற்றும் காலா பானி ஆகிய குற்றப் படங்கள் மிஸ்டர் & மிஸஸ் ’55 , சல்தி கா நாம் காடி மற்றும் ஹாஃப் டிக்கெட் ஆகிய நகைச்சுவைப் படங்களில் நடித்ததன் மூலம் மதுபாலா சர்வதேச அளவில் பிரபலமடைந்தார்.


