கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் இன்று தமிழ்நாடு ரயில்வே டி.ஐ.ஜி விஜயகுமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா, அமைச்சுப் பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் செல்வக்குமார், மயில்குமார் உட்பட அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


