ஸ்ரீவைகுண்டத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட பிரதிநிதிகள் மாநாடு நடந்தது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட 19 ஆவது பிரதிநிதிகள் மாநாடு ஸ்ரீவைகுண்டத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்து மாநாட்டை துவக்கி வைத்தார். மாநில பொருளாளர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால சட்ட திட்ட நடவடிக்கைகள், மக்கள் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ் பேசினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழிற் சங்க செயளாளர் ராமகிருஷ்ணன் கட்சியின் செயல்பாடு மற்றும் பிப்ரவரி 12 தேதி நடக்கும் மாநில மாநாடுக்கு நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களின் சார்பாக மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீனவ சுரேஷ் தேவர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநாடுக்கு செல்வது குறித்து பேசினார்.
மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் மாவட்ட தலைவராக சிவராம் கார்த்திக், மாவட்ட செயலாளராக கால்வாய் முத்துராமலிங்கம், துணை செயலாளாராக வழக்கறிஞர் உடையார் பாண்டியன், பொருளாளராக துரைசரவணன், மாவட்ட துனண தலைவராக ரமேஷ் பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதியாக, மாவட்ட பொருளாளர் துரைசரவணன் நன்றி கூறினார்.


