மணக்கரையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை மலைப்பார்வதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டிகள் பந்தயம் இன்று நடந்தது.
பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டுவண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி, குதிரை வண்டி என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிக்காக மணக்கரையில் இருந்து வல்லநாடு வரை தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மாட்டுவண்டி பந்தயத்தை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டுவண்டிகள் பந்தயத்தில் 8 பெரிய மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளும் குதிரைவண்டிகளும் கலந்து கொண்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டுவண்டிககளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


