செய்துங்கநல்லூரில் உள்ள மிகவும் பழமையான சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்திருவிழா நடந்தது. இதையட்டி அதிகாலையில் சிவன், சகதி மற்றும் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. மாலையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பனி உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் பவனி வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர் முத்துராமன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.


