வல்ல நாடு சாது சிதம்பர சுவாமிகள் வள்ளலாரின் வழித்தோன்றல். அருட்பெரும் ஜோதி அருட்பெரும் கருணை என ஜோதி வழிபாட்டை முன்னிறுத்தி சித்தராக வாழ்ந்து வந்தவர். அவருடைய ஜீவ சமாதி வல்ல நாடு அருகில் உள்ள பாறைககாடு பகுதியில் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அவரது துணைவியார், தாய், தந்தையர், சித்தி , சித்தப்பா, தான் வளர்த்த மணி கண்டன் யானை சாமாதியும் அந்த ஆலய வளாகத்தில் உள்ளது. சதுரகிரி மலையில் வாழ்ந்த ஒற்றைக் கொம்பன் யானை சிரசை இவரது சித்தர் சமாதியில் வைத்து விளக்கு ஏற்றி வைத்துள்ளார். அந்த தீபம் தற்போதும் எரிந்து கொண்டிருக்கிறது. பூச நட்சத்திரத்தில் பிறந்த இவரது சமாது கோயிலில் பூச நட்சத்திரம் தோறும் வழிபாடு நடந்து வருகிறது. தைப்பூசத்தில் இந்த கோயில் வளாகத்தில் உள்ள ஜோதி மண்டபத்தில் 1008 தீப வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டை ஒட்டி காலையில் அகவல் பாராயணம் பாடப்பட்டது. அதன் பின் இரவு 1008 விளக்கு ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்னதானமும் நடைபெற்றது.
—


