தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அகரம் பகுதியை சேர்ந்த பலவேசம். இவரது வீட்டை கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் சேதப்படுத்தினார். இதுகுறித்து பலவேசம் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி பாலாஜியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் 6 மாதத்திற்கு பின்னர் இன்று பாலாஜியை அகரத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


