தியாகிகள் நாள் இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவதாகும். தேசத்தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி மறைந்த சனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது மொழிப்போர் தியாகிகள் நினைவுநாளை ஒட்டி, தமிழ் மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.தமிழ் மொழியைக் காப்பதற்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதைசெலுத்தும் வகையில் மொழிப்போர் தியாகிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதன் பகுதியாக சென்னை, கிண்டி, காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தமிழ்மொழிக்காக உயிர்நீத்த தியாகிகளின் உருவப் படங்களுக்கு முதல்வர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.நிகழ்வில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “இந்திதான் இந்தியா எனின் அந்நிலை மாற்ற இன்னுயிரை ஈந்தேனும் தமிழ் மானம் காப்போம் என உயிர்நீத்த மொழிக்காவலர்களின் திருவுருவப் படங்களுக்குக் கிண்டி மொழிப்போர்த் தியாகிகள் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினேன். இனி ஓர்உயிரையும் இழக்காமல் நம் உரிமையை நிலைநாட்டுவோம்” எனக் கூறியுள்ளார்.


