அமலிநகர் தியாகி பெஞ்சமின் மனைவி பெட்லா பெஞ்சமின் அவர்களுக்கு குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு சார்பில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
தூத்துககுடி மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி. செந்தில்ராஜ் அவர்கள் ஏற்பாடில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தியாகிகள் வாரிசுகளை கௌரவ படுத்தும் நிகழ்வு நடந்தது. தியாகிகளை கவுரவிக்கப்படும் வகையில் அமலிநகரில் 90 வயதை கடந்து வாழ்ந்துக்கொண்டிருக்கும் தியாகி பெஞ்சமின் அவர்களின் மனைவி பெட்லா பெஞ்சமின் அவர்களை, திருச்செந்தூர் துணை தாசில்தார் சங்கரநாராயணன், செல்வலிங்கம், கண்ணன், ஆகியோர் அவர் வசிக்கும் திருச்செந்தூர் அமலிநகர் வீட்டுக்கு நேரில் வந்து பொன் ஆடை அணிவித்து இனிப்பு வழங்கி ஆசிபெற்றுக் கொண்டார்கள். அப்போது அவருடன் தியாகி பெஞ்சமின் மகன் அசோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


