தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியம் தெற்கு காரசேரி பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் கிளாக்குளத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பேபி தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் சத்யவாசன் தீர்மானங்களை வாசித்தார். பார்வையாளராக கணிணி உதவியாளர் ரீகன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் கந்தசுப்பு கிராம உதவியாளர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


