செய்துங்கநல்லூர் ஊராட்சி மன்றத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவாசய சங்க தலைவர் குமார், சமூக சேவகர்சுடலை முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் அபு, நவாஸ், செல்வி, முருகன், வாசகர் வட்ட தலைவர் திருமலை, அப்துல் காதர், பஞ்சாயத்து எழுத்தர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


