தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் அருகே உள்ள சேர்வைக்காரன்மடம் ஊர்க்காவலப் பெருமாள் கோவில் அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சாயர்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து இன்று சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் 6 பேரை போலீசார் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு சீட்டுக்கட்டு மற்றும 950 ருபாய் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


