தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து முறப்பநாடு காவல் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் தலைமையிலான போலீசார் மணக்கரையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மணிகண்டன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மது பாட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


