விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் இன்று கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம ஊராட்சிகளில் வேளாண் சிறப்பு முகாம் நடந்தது.
விட்டிலாபுரம் கோவில்பத்து கிராமத்தில் நடந்த வேளாண் திட்ட சிறப்பு முகாமில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் பாலசுப்பிரமணியன் தலையேற்று நெல் சாகுபடியில் ஜிங்க் சல்பேட் இடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் இசக்கியப்பன் நானோ யூரியா முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விளக்கமளித்தார். மேலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் பயன்பாடு குறித்து கண்காட்சி வாகனம் துவக்கி வைக்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கலைஞர் திட்டத்தில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
வேளாண்மை பொறியில் துறை உதவி செயற்பொறியாளர் ஜெகவீரபாண்டி கலந்து கொண்டு வேளாண் பொறியியல் துறை திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். உதவி மின் பொறியாளர் மகேஷ்குமார் கலந்து கொண்டு துறை திட்டங்கள் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். கால்நடை ஆய்வாளர் அனந்தராமகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு துறை திட்டங்கள் குறித்து கூறினார். மேலும் முகாமில் குடற்புழு நீக்கம், தாது உப்பு கலவை பயன்பாடு, ஆடுகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற செயல்விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது. மேலும் வாகைகுளம் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் முருகன் கலந்து கொண்டு நெல் மற்றும் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்தார்.
இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கொம்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இறுதியாக விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ரகுநாத் செய்திருந்தார்.


