தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாடு பாறைக்காட்டில் சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்திற்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
இந்த நிலையில் இன்று வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் ஆலயம் சார்பில் வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி விவசாயி முத்து என்பவருக்கு அவர்களுக்கு, பசு மாடும் கன்று குட்டியும் தானமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பரசுவாமிகள் திருக்கோவில் நிர்வாக பொறுப்பாளர் துரை, தங்கராஜ், கந்தன், கொம்பையா, சுந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஐடிவிங் பாண்டியன், இசக்கி, தங்கபாண்டி உள்பட பலர் உடன் இருந்தனர்.


