தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கழுங்குவி¬s கிராமத்தில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடந்தது.
அப்பகுதியில் உள்ள இயற்கை எழில் மிகுந்த சிறு சிறு மலைகளை காப்பதை உணர்த்தும் வண்ணம் 75 அடி உயர மலையில் மலை பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த விழாவில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஊர்மக்கள் கலந்து கொண்டு மலையின் மீது பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதில் சிறப்பு விருந்தினராக சாத்தான்குளம் வட்டாட்சியர் தங்கையா கலந்து கொண்டார்.


