கீழ செக்காரக்குடியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கீழச்செக்காரக்குடியில் வஉசி திடலில் 17ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயம் நடந்தது.
பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு, தேன்சிட்டு என நான் பிரிவுகளாக இந்த மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இந்த போட்டியில் 13 பெரிய மாட்டு வண்டிகள், 17 சிறிய மாட்டு வண்டிகள், 20 பூஞ்சிட்டு வண்டிகள், 15 தேன் சிட்டு வண்டிகள் கலந்து கொண்டது. இந்த மாட்டு வண்டி போட்டிக்கு கருங்குளம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் லட்சுமணன், முன்னாள் ஒன்றிய துணைத்தலைவரும், கூட்டுறவு வங்கி தலைவருமான அய்யம்பெருமாள், ஊராட்சி மன்றத்தலைவர் ராமலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். அனைத்து மாட்டு வண்டிகள் பந்தயத்தையும், தட்டப்பாறை காவல் துணை ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை சங்கரம்மாள்புரம் மோகன் சாமி குமார் மாட்டுவண்டியும், இரண்டாம் பரிசை துரைசாமிபுரம் வீர ஜோதி மஞ்சானப்பட்டி மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை குமாரரெட்டியாபுரம் மகாவிஷ்ணு மாட்டுவண்டியும் பெற்றது.
சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வள்ளியூர் ஆனந்த் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை தேனி மாவட்டம் சிறப்பாறை வெண்டி முத்தையா மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை ஐயங்கார் பேக்கரி சுரேஷ் குமார் மாட்டுவண்டியும் பெற்றது.
பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை தூத்துக்குடி அஜித்குமார் மாட்டு வண்டியும், இரண்டாம் பரிசை செக்காரக்குடி வீர சங்கிலி மாட்டு வண்டியும், மூன்றாம் பரிசை வள்ளியூர் ஆனந்த் மாட்டுவண்டியும் பெற்றது.
தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை வள்ளியூர் ஆனந்த் வண்டியும், இரண்டாம் பரிசை ஓட்டப்பிடாரம் வீர ஜோதி மஞ்சுநாத் சரண்யா குட்டி வண்டியும், மூன்றாம் பரிசை நடுச்செக்காரகுடி வெற்றிமாறன் வண்டியும் பெற்றது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செக்காரக்குடி பொதுமக்கள் சார்பில் வஉசி இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.


