எழுத்தாளர்.முத்தாலங்குறிச்சி காமராசு
************************************************
புதைந்த ரகசியங்களை வெளிக்கொணர்ந்து
புத்தகங்கள் வடிவாக்குபவர்!
ஜமீன் வரலாறுகளைக்
காவ்யா பதிப்பகம் மூலம்
காவியங்கள் ஆக்கியவர்!
அலைய சளைக்காதவர்!
எழுத மலைக்காதவர்!
அரசியல்வாதிகள் ஆன்மீகவாதிகளை
அவர் சொந்த ஆதாயத்திற்காகச்
சந்திக்காதவர்!
ஆதிச்சநல்லூர் முதல் சுடலைகதை
களரி கதை வரை எழுத்தில் வடித்தவர்!
வயது வித்தியாசம் பாராமல்
எளிமையாகப் பழகும் பண்பாளர்!
சிபாரிசு இல்லாமல் மாநிலஅரசு விருதுகள் பெற்றவர்!
சிந்தனை எல்லாம் தாமிரபரணி நினைவுகளைச் சுமப்பவர்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
என்றும் அன்புடன்,
முனைவர் வ ஹரிஹரன்
தமிழ்ப் பேராசிரியர்,
திருநெல்வேலி.


