அன்பான வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். தாமிரபரணியை தொட்டு எந்த தலைப்பில் எழுதினாலும் எழுதிக்கொண்டே இருக்கலாம். அப்படித்தான் நெல்லை டைம்ஸ் இல் நான் எழுதும் பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் என்ற தொடர் 1 வருடத்தினை கடந்து மிகச்சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடர் வெளியிட காரணமாக இருந்த நெல்லை டைம்ஸ் நிறுவனர் மாலைராஜா அய்யா அவர்களுக்கும், பொறுப்பாசிரியர் தம்பான் அவர்களுக்கும் , ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களான உங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் & அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


