செய்துங்கநல்லூரில் உள்ள திருச்செந்தூர் பஸ் ஏறும் நிலையத்தில் பொங்கல் அன்று காலை பிச்சைகாரர் ஒருவர் இறந்து கிடந்தார். இவர் 10 நாள்களுக்கு முன்பு செய்துங்கநல்லூர் பகுதியில் பிச்சை எடுத்து வந்ததாகவும். அதன் பின் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு செய்துங்கநல்லூர் பஸ் நிலையத்தில் தங்கி இருந்தாகவும் கூறப்படுகிறது. இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவ மனைக்கு போலிசார் அனுப்பி வைத்தனர். இவர் யார் இவரை பற்றி அடையாளம் தெரிந்தால் செய்துங்கநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுள்ளனர்.


