மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஜமால் தலைமையில் உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு பகுதியில் உள்ள திருமண மஹால் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த மந்திர மூர்த்தி மகன் முத்துச்சாமி (எ) கடுக்கா முத்து (23) மற்றும் ஸ்ரீவைகுண்டம் மேடை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கந்தசாமி (எ) கண்ணன் (24) என்பதும் அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
போலீசார் முத்துச்சாமி (எ) கடுக்கா முத்து மற்றும் கந்தசாமி (எ) கண்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துச்சாமி (எ) கடுக்கா முத்து மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து காவல் நிலையத்தில் ஒரு கொலை மிரட்டல் வழக்கும் என 4 வழக்குகளும், மற்றொரு எதிரி கந்தசாமி (எ) கண்ணன் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், சேரகுளம் காவல் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


