செய்துங்கநல்லூர் போலீஸ் காவல்நிலையத்திற்கு உள்பட்ட விட்டிலாபுரம் காட்டு பகுதியில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் காவல்துறை ஆய்வாளர் பத்பநாப பிள்ளை, உதவி ஆய்வாளர்கள் கருத்தையா, மாரியப்பன், அஜய்குமார் , தலைமை காவலர் நிறைகுலத்தான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு தூக்கில் தொங்கி இறந்தவரின் உடலை இறக்கினர். சில நாளுக்கு முன்பு இவர் தூக்கில் தொங்கியிருப்பார் போல எனவே தூர் வாசம் வீசியது. மேலும் அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. எனவே அந்த உடலை உரிமை கொண்டாட யாரும் வரவில்லை. எனவே போலீசார் சுமார் 2 கிலோ மீட்டர் அந்த உடலை சுமந்த படியே விட்டிலாபுரம் வள்ளூவர் காலனி அருகே கொண்டு வந்தனர். அதன் பின் பாளை அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் சென்னை சாலிகிராமத்தினை சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அரசவன்(46) என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். தனது சகோதரி சீதாலெட்சுமியை விட்டிலாபுரத்தில் பார்க்க வந்தவர், தற்கொலை செய்து கொண்ட விவரம் தெரியவந்தது. அதன் பின் போலிசார் சீதா லெட்சுமியிடம் அரசவன் உடலை ஒப்படைத்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, யாரும் வராத சூழ்நிலையில் கூட செய்துங்கநல்லூர் காவல்துறை ஆய்வாளர் பத்பநாப பிள்ளை, உதவி ஆய்வாளர்கள் கருத்தையா, மாரியப்பன், அஜய்குமார் , தலைமை காவலர் நிறைகுலத்தான் மற்றும் போலிசார் தூர் நாற்றத்துடன் உடலை தூக்கி வந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ளது. இதனால் போலிசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டும் காட்டு பகுதியில் இருந்த சுமார் 2 கிலோ மீட்டர் உடலை தூக்கி சுமந்த போலிசாரை பல்வேறு அமைப்புகள் பாராட்டி வருகிறது.


