இம்ரான் கான் ஒரு இந்திய பாலிவுட் திரைப்பட நடிகராவார். இவர் 1983 வது வருடம் ஜனவரி 13ம் தேதி பிறந்தார். இவரின் இயர் பெயர் இம்ரான் கான் பால் என்பதாகும். இவர் நடிகர் ஆமிர் கான் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குனருமான மன்சூர் கான் ஆகியோரின் மருமகன் ஆவார். பர்சியன் மற்றும் பிரித்தானிய வம்சாவழியில் வந்தவர். இவர் 2008வது வருடம் ஜானே து யா ஜானே நா என்ற படத்தில் அறிமுக நாயகனாக நடித்துப் புகழ் பெற்றார்.
இம்ரான் கான் அனில் பால்[3] என்னும் இந்திய பெங்காலி அமெரிக்கர் மற்றும் நுஜத் கான் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை சிலிகான் வேலியில் நெட்ஃபிக்ஸ் என்னும் நிறுவனத்தில் பொறியியல் செயற்பாட்டு இயக்குனராகப் பணிபுரிகிறார். இவருக்கு, நுஜட்டின் சகோதரரான இயக்குனர் மன்சூர் கான் மும்பை ஐஐடியில் வகுப்புத் தோழராக இருந்தவர். இம்ரானுக்கு ஒன்றரை வயதாகும்போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்து விட்டனர். இவர் இந்தியாவில் தனது தாயாரிடம் கான் என்னும் குடும்பப் பெயருடன் வளர்ந்தார். இருப்பினும், உயர் நிலைப் பள்ளிக் கல்வியை முடிப்பதற்காக இவர் தனது தந்தையுடன் வசிப்பதற்காகக் கலிஃபோர்னியாவிற்குச் சென்றார். பிறகு லாஸ் ஏஞ்சல்சில் திரைப்படத் தயாரிப்பில் பயிற்சி பெற்றார். இவர் நடிகர் அமீர் கான் மற்றும் இயக்குநர் மன்சூர் கான் ஆகியோரின் மருமகனும் மற்றும் குறிப்பிடத்தக்க இயக்குனரும் தயாரிப்பாளருமான நசீர் ஹுசைனின் பேரனும் ஆவார். இந்தியாவில், இவர் பாம்பே ஸ்காட்டிஷ் ஸ்கூல் என்னும் பள்ளியில் படித்தார். நாலாவது வகுப்பிற்குப் பிறகு இம்ரான் ஸ்காட்டிஷ் பள்ளியை விட்டு ஊட்டியில் ஒரு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார்.


