திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் கல்வி சுற்றுலா நடந்தது. தலைமை ஆசிரியர் அகஸ்டினாள் ஜெப ராணி மாணவர்களை பள்ளியில் இருந்து வழி அனுப்பி வைத்தார். மிகவும் தொன்மை வாய்ந்த சிற்பக் கலைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக தமிழகத்தின் சிறந்த சிற்பக் கோவிலாக கருதப்படக்கூடிய கிருஷ்ணாபுரம் கோவிலுக்கு சென்றனர். அங்கு கணேசன் சிற்பங்கள் குறித்தும் அதில் உள்ள நுட்பங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிககப்பட்டது. மாணவர்கள் அவற்றை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் அகழாய்வு தளமாக விளங்கக்கூடிய ஆதிச்சநல்லூர் என்ற இடத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆய்வாளர் அருண் பிரசாத் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். முதுமக்கள் தாழி என்றால் என்ன என்றும் அதனுள் என்னென்ன வைக்கப்பட்டு இருந்தன என்பது குறித்தும் அவர் விளக்கினார். தாமிரபரணி ஆறு குறித்தும் அங்குள்ள மண்ணின் தன்மை குறித்தும் முதுமக்கள் தாழியில் இருந்து எடுக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும் மாணவர்கள் கேட்டறிந்தனர்.மாணவர்களுடன் தமிழாசிரியர் கா. சாரதா, அறிவியல் ஆசிரியர் டோ.செல்வி வேளாங்கண்ணி, சமூக அறிவியல் ஆசிரியர்கள் பார்வதி, தி.முருகன் ஆகியோர் அடங்கிய ஆசிரியர் குழுவினர் சென்றனர்.


