மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கிராம உதயம் கிளை அலுவலக மேலாளார் வேல்முருகன் தலைமை வகித்தார்.
தனி அலுவலர் ராமசந்திரன், பகுதி பொறுப்பாளர் ஆறுமுகவடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுதி பொறுப்பாளர்கள் பிரேமா, முருக செல்வி, ஆனந்த் செல்வன், முத்துசெல்வன், ஆரியாநாச்சியார், லித்யா மற்றும் கிராம உதய தன்னார்வ தொண்டர்கள் உள்பட பலர் கொண்டனர். ஊழியர்கள் கலந்து கொண்டு அலுலகம் முன்பு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.


