தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் பல ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டிருக்கிறனர்.
அவர்கள் இரவு நேரங்களில் சாலையில் பாதுகாப்பாக செல்ல போலீசார் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலையம் முன்புள்ள சோதனைச்சாவடியில் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு செய்துங்கநல்லூர் போலீசார் பக்தர்களுக்கு ஒளிரும் பாதுகாப்பு ஸ்டிக்கரை பக்தர்கள் பின்பகுதியிலும், அவர்கள் கையில் கொண்டு வரும் பையிலும் ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில் போலீசார் ஒட்டினர். இந்த நிகழ்ச்சியில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் கலந்து கொண்டு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக செல்வது குறித்து அறிறுத்தினர்.


