இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் பலியாகிறார்கள் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புகையிலை பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் பலியாகிறார்கள். என புகையிலைக்கு எதிரான நடந்த கருத்தரங்கில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.திருநெல்வேலி கங்கை கொண்டானனில் உள்ள டிபி சோலார் நிறுவனம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனம்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் புகையிலை ஒழிப்பு கருத்தரங்கம் காலையில் திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் தொடர்ந்து மாலையில் செழியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி நிலைப் பள்ளியில்லும் வைத்து நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு டி பி சோலார் நிறுவன மேலாளர் மரியதாஸ் தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி முன்னிலை வகித்தார்
சிறப்பு விருந்தினராக மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு குழு ஆலோசகர் டாக்டர் சுபலட்சுமி கூறியதாவது:- தமிழகத்தில் இளம் சிறார் குற்ற செயல்களில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் கஞ்சா போன்ற புகையிலை பழக்கமே காரணமாகும். புகையிலையில் நிகோடின் என்ற அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. இது கஞ்சா, ஹான்ஸ்-ஐ விட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இந்தியாவில் வருடத்திற்கு 9 லட்சம் பேர் புகையிலைக்கு பலியாகிறார்கள் தினமும் 2.500 பேர் பலியாகிறார்கள். வாய் குரல்வளை மற்றும் நுரையீரல் புற்றுநோய் 90% புகையிலை பழக்கத்தால் மட்டும் வருகிறது. புகையிலை பிடிப்பதில் 89 சதவீதம் 18 வயதுக்குள் இந்த பழக்கத்துக்கு அடிமைகிறார்கள். புகையிலை பயன்படுத்துவதால் வாய், தொண்டை, நுரையீரல், மூக்கு குழாய், உணவு குழாய், சிறுநீரகப்பை, சிறுநீரகம், கணையம், கர்ப்பப்பையின் வாய் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுகிறது மேலும் நுரையீரல் கோளாறுகளையும், மூச்சு திறங்களையும் ஏற்படுத்துகிறது. ஆகவே யாரும் புகையிலைப் பழக்கத்துக்கு ஆளாக கூடாது என டாக்டர் சுபலட்சுமி கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக களப்பணியாளர் ஹெலினா, மாவட்ட நல கல்வியாளர் தமிழ்ச்செல்வன், சமூகப் பணியாளர் டேவிட் பொன்ராஜ், சுகாதார ஆய்வாளர் சுந்தரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர் இதில் வடக்கு சொழியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, கங்கை கொண்டான் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி மற்றும் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் புகையிலைக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர். அனைவருக்கும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒடுங்கப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி, ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி உட்பட பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்


