பிரியங்கா காந்தி. பிறப்பு: 1972 சனவரி 12) இந்திய அரசியல்வாதி. இவர் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோரின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியும், பெரோஸ் கான் இந்திரா காந்தி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். 2019 சனவரி 23 இல் இவர் கிழக்கு உத்தரப்பிரதேசத்துக்கான அகில இந்திய காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டார்.தற்போதைய ஆளும் கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவியும் மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் தலைவியுமான சோனியா காந்தி-ராஜீவ் காந்தியின் இரண்டாவது குழந்தையாவார்.இவரின் தந்தை ராஜீவ் காந்தி, பாட்டி இந்திரா காந்தி மற்றும் முப்பாட்டனார் ஜவஹர்லால் நேரு ஆகிய அனைவரும் இந்திய பிரதமர்களாக பதவி வகித்தவர்கள் ஆவார்கள். இவரின் பாட்டனார் பெரோஸ் காந்தி மதிப்புக்குரிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், இவரின் முப்பாட்டனார் மோதிலால் நேரு அவர்கள் இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்தின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தவர்கள் ஆவர். இவர் ஜீசஸ் மற்றும் மேரி கான்வென்ட்டில் உள்ள மாடர்ன் பள்ளிக்கூடத்தில் பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் உளவியல் பிரிவில் பட்டம் பெற்றார். வியு2பிஜிஒய் (VU2PGY) என்ற பெயர்கொண்ட பொழுதுபோக்கு வானொலியை இயக்குபவராக இருந்தார்.


