தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாட்டு நலப்பணித் திட்ட அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஒன்றியத்திற்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடந்தது வருகிறது.
முகாமின் இரண்டாம் நாளான இன்று இலவச சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. இதில் கால்நடை மருத்துவர் முனைவர் குமார் பங்கேற்று ஆடு, மாடு போன்றவைகளுக்கு குடற்புழு நீக்கம், மலட்டுத்தன்மை நீக்கம் ஆகியவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளித்து மற்றும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
இம்முகாமில் ஆழ்வார்கற்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 200 கால்நடைகளுக்கு மருத்துவம் செய்யப்பட்டது. மேலும், மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் தயாரிப்பு என்ற தலைப்பில் இயற்கை உரங்கள் தயாரிப்பு குறித்த தகவல்களை வேளாண் நுண்ணுயிரியல் பேராசிரியர் முனைவர் ஜெபர்லின் பிரபினா வழங்கினார். இதில் மக்கள் பலரும் கலந்துகொண்டு பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.


