அணியாபரநல்லூர் மற்றும் மீனாட்சிபட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையட்டி பாரதிய ஜனதாக கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அணியாபரநல்லூர் மற்றும் மீனாட்சிபட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திர போட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரபு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் நங்கமுத்து முன்னிலை வகித்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தலைவர் முருகன் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் முருகன், பிறமொழி பிரிவு மாவட்ட செயலாளர் தம்பான், வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்டச் செயலாளர் வசந்த், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மணிகண்டன், தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் ஜோதி, கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் விநாயகப் பெருமான், அமைப்புசாரா பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜ், ஆன்மீகப் பிரிவு ஒன்றிய செயலாளர் மாரியப்பன், அவனியாபரநல்லூர் கிளை தலைவர் இசக்கிமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


