பிரியா பவானி சங்கர் , பிறப்பு: டிசம்பர் 31, 1990 இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். 
பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை சொந்த இடமாகக் கொண்டவர். மேயாத மான் 2017 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படம் ஆகும். இப்படம் மெல்லிய காதலுடன் நகைச்சுவை கலந்த திரைப்டமாகும். இப்படம் ரத்ன குமார் எனும் அறிமுக இயக்குநரால் இயக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாகவும், விவேக் பிரசன்னா, இந்துஜா இரவிச்சந்திரன், அருண் பிரசாத் மற்றும் அம்ருதா ஸ்ரீநிவாசன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



