ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டையை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அட்டையாக மாற்றித்தர கோரி மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கால்வாய், செய்துங்கநல்லூர், நாட்டார்குளம், கொங்கராயகுறிச்சி, நாணல்காடு, வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, பூவாணி, தெற்கு காரசேரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தில் உள்ள ரேசன் கார்டு எனப்படும் குடும்ப அட்டையை ஏஏஒய் என கூறப்படும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கார்டாக மாற்றித்தரக் கோரி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகை தந்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தோழர் கண்ணன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழு உறுப்பினர் கால்வாய் மணி, மந்திரம், வடக்கு காரசேரி மாடசாமி, கனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


