செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் சிவன் கோயிலில் திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவிற்கு கொடியேற்ற செங்கோல் மட ஆதினம் வருகை புரிந்தார். கொடியேற்றம் முடிந்தவுடன் பக்தர்களிடம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். தொடர்ந்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி தூத்துக்குடி மாவட்ட நிர்வாக வெளியிட்ட, “தூத்துக்குடி மாவட்டத்தில் அறியப்படாத தியாகிகள்” என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் குருமாரியப்பன், சுவீட் கணேசன், அர்ச்சகர் பாலா, முத்துராமன் உள்பட பலர் இருந்தனர்.


