ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லகுளம் கீழத்தெருவை சேர்ந்தவர் தங்கபெருமாள்(80). இவர்களுக்கு பூர்வீகமான சொத்து வல்லகுளத்தில் உள்ளது. இந்த சொத்து மூன்று தலைமுறையாக தங்கபெருமாள் குடும்பத்தினர் அனுபவித்து வருகிறார்கள். வங்கி கடனுக்காக அடமானமும் வைப்பதும் ,திருப்புவதுமாக இருந்துள்ளார்களே தவிர வேறு யாருக்கும் சொத்தை விற்கவில்லை. இதற்கிடையில் 31.07.2013 ல் தங்கபெருமாள், தன்னுடைய தம்பிகள் சௌந்திரபாண்டி, கணேசன் ஆகியோருடன் சொத்தை பிரித்து கொண்டார். இதற்காக ஸ்ரீவைகுண்டம் சப் ரிஜிஸ்ட்டர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தனர். இந்த காலகட்டத்தில் இவரகளது கூட்டு பட்டாவில் அனுபவித்து வரும் முத்தையா நாடாரும் தனது பங்கு சொத்தை கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார். ஆகவே இருபிரிவினர் பெயரில் கூட்டுபட்டா ஏற்றவேண்டும் என்று இரு பிரிவினரும் மனு செய்தனர். ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்தில் தங்கபெருமாளுக்கு போதிய டாக்குமெண்ட இல்லை என்று கடந்த 9 வருட காலமாக அலைகழித்து வந்தனர். ஆனாலும் இவர் விடாமல் அலைந்து வந்தார். சுமார் 11 தடவை அவர்கள் கேட்ட ஆவணங்களையெல்லாம் கொண்டு போய் கொடுத்தார். இதற்காக தொடர்ந்து இணையவழி மூலமாக மனுசெய்து வந்தார் . மனுவை அதிகாரிகள் தொடர்டந்து தள்ளுபடி செய்தே வந்தனர். கடந்த 3.06.2021 ல் நடந்த சமாபந்தியில் மனு கொடுத்தார். அப்போது மூன்று சகோதரர்களில் சௌந்திரபாண்டி பெயரில் மட்டும் கூட்டு பட்டாவில் சேர்த்துவிட்டனர். ஆனால் மற்ற இரண்டு பேர் பெயரும் சேர்க்க வில்லை. ஆனாலும் விவசாயி தங்கபெருமாள் முயற்சியை கை விட வில்லை. இறுதியாக 24.10.2022 அன்று இணையவழி மூலமாக மனு செய்தார். அப்போது அவர்கள் கேட்ட தகவல்கள் எல்லாவற்றையும் தங்கபெருமாள் பட்டா தாசில்தாரிடம் நேரில் கொண்டு கொடுத்தார். எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறிய அதிகாரி இறுதியில் மூல பத்திரம் இல்லை என மனுவை தள்ளுபடிசெய்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்தார் தங்கபெருமாள். அண்ணன் தம்பி மூன்று பேர் ஒரே நேரத்தில் பத்திரம் பதிவு செய்யும் போது, ஒருவருக்கு மட்டும் கூட்டு பட்டாவில் சேர்த்த வருவாய் துறையினர் மற்ற இருவருக்கும் மூல பத்திரம் இல்லை என்று கூறியதால் அதிகாரிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அவர் மனுசெய்தார். அந்த மனுவிற்கு வந்த பதில் அவரை அதிர்ச்சி அடைய வைத்தது.
கடந்த 20.02.2018 வரை தங்க பெருமாளின் தகப்பனார் பாலையாநாடார் முத்தையா நாடார் ஆகிய இருவர் பெயரில் கூட்டுபட்டாவாக இருந்த பட்டா அதன் பின் இருவர் பெயரையும் நீக்கி விட்டு கேரளாவை சேர்ந்த சுபாஷ்கோபி என்ற பெயரில் மாற்றப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார்.
இவர்கள் செய்த தவறை மறைக்க தனது மனுவை மூல பத்திரம் இல்லை என்று தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.
தனது சொத்தில் தன் தந்தை பெயரை நீக்கியதோடு மட்டுமல்லாமல் தன்னை திசை திருப்ப மூலபத்திரம் இல்லை என பொய்யான தகவலை கொடுத்து செயல்பட்ட பட்டா தாசில்தாரின் செயல் பாமர மக்களுகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாகவே இருக்கிறது. ஏற்கனவே இருதயநோயால் பாதிக்கப்பட்ட விவசாயி தங்க பெருமாள் இது குறித்து மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுகொடுத்துள்ளார். மாவட்ட ஆட்சி தவலைர் இந்த பிரச்சனையில் நேரில் தலையிட்டு விவசாயிகளை திசை திருப்பி விட்டு அலைய வைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்தங்கள் பூர்வீக சொத்தை தனது பெயரிலும் தனது தம்பிபெயரில் கூட்டு பட்டாவில் சேர்த்து தருவார் என நம்பிக்கையுடன் இருக்கிறார் தங்கபெருமாள்.


