தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் சலவை செய்வதற்காக அரசு மூலமாக இடம் கொடுக்கப்பட்டு அதில் துணிகளை சலவை தொழிலாளர்கள் சலவை செய்து வந்தனர்.
அப்போது சலவை செய்யும் இடத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சலவை தொழிலாளர்களால் முழுமையாக பயன்படுத்த முடியாமல் இருந்தது.
மீண்டும் அதே இடத்தில் சலவை செய்வதற்கு வசதிகள் செய்து தர வேண்டும் என சலவை தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில், அதே இடத்தில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் என்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர், பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்த இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு சலவை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் சலவை கூடத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் சுரேஷ் தலைமையில் சலவை தொழிலாளர்கள் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜிடம் சென்று சலவை கூடத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
இதனையடுத்து, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்ராஜ் இன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் செயல்பட்டு வந்த சலவை கூடம் இருந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அங்கு வந்திருந்த சலவை தொழிலாளிகளிடம் இந்த இடத்தில் என்ன செய்து தர வேண்டும் எந்த மாதிரியான வசதிகள் செய்து தர வேண்டும் என அவர்களிடம் கேட்டு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என உறுதி அளித்தார்.
அப்போது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், அண்ரோ, அகில இந்திய பார்வர்டு மாநில இளைஞரணி தலைவர் சுரேஷ், நேதாஜி இளைஞர் படை தலைவர் ராமசாமி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், திமுக சண்முகசுந்தரம், காங்கிரஸ் எம்எல்ஏ நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் சீனிராஜேந்திரன், மாவட்ட பொதுசெயலாளர் அலங்காரபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எடிசன், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, நகரத் தலைவர் கருப்பசாமி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயசீலன், வட்டாரப் பொருளாளர் சந்திரன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெபஸ் பிளஸ்வின், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் இசைசங்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மகாராஜன் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஊடகப்பிரிவு முத்து மணி, மரியராஜ், வட்டார செயலாளர் நிலமுடையான், நகர துணைத் தலைவர் செல்வம், முன்னாள் நகரத் தலைவர்கள் சித்திரைவேல், பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் மதிசேகரன், முன்னாள் வட்டாரதலைவர் சிங்கப்பன், ஸ்ரீவைகுண்டம் பேருராட்சி கவுன்சிலர் வள்ளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.


