ரேணியஸ் அடிகளார் தாமிரபரணி கரையில் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தோற்றுவித்த சபைகள் குறித்து நல்லாசிரியரும் தூத்துக்குடி பண்டாரப்பட்டி டி.என்.றி.எ பள்ளி தலைமை ஆசிரியருமான நெல்சன் பொன்ராஜ் அவர்கள் கொடுத்த தகவல்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். இனிதொடர்ந்து அது குறிதது பேசலாம்.
1833- அச்சம்புதூர், அச்சன்குன்றம், அடைக்கலபுரம் (சாத்), அன்பினகரம்(கடா), அய்யாபுரம், ஆரோக்கியபுரம், ஆலடித்தட்டு, ஆவடிப்பட்டி, இடையர்காடு(சாயர்), எழுவிளை, ஊற்றுமலை, ஒய்யாரக்குடியிருப்பு, கலியன்குண்டூர், கலிங்கப்பட்டி, நல்லூற்று, சாந்தபுரம்(மெஞ்), சாமிக்குடியிருப்பு, சிவசைலனூர், சின்னத்தம்பிநாடார்குடியிருப்பு, செபஞானபுரம்(தென்), செண்பகப்பேரி, சேர்வைக் காரன்மடம்(புது) , தளவாய்புரம்(கைலாச), தாளைவிளை, தேரிப்பனை, தேரிக்குடியிருப்பு, நைனாம்பட்டி(வாகை), பணிசகுளம், பத்தமடை, பாணாங்குளம், கழுதூர், சருவந்தாவு, காட்டுப்பச்சேரி, காரிகோவில், கானம், கீழச்சுரண்டை, குண்டல், குலசேகரன்குடி, கொத்தனேரி, சவரிச்சநாடான்குடி, புதுச்சுரண்டை, புதூர்(இடையன்குடி) , பூச்சிக்காடு, பூலாங்குளம், மேலச்சுரண்டை, வஞ்சிக்குடியிருப்பு, வாத்தியார்குடியிருப்பு, வீரகேரளம்புதூர், வீரமாணிக்கம், வெள்ளாளன்குளம், ஸ்ரீவைகுண்டம் கோட்டை.
1834 – அடைச்சாணி, அச்சாவு, அடைக்கலபுரம்(மெஞ்), அணைஞ்சசேர்வைக்காரன்பட்டி, அத்திகுளம், ஆழ்வார் திருநகரி, ஆழ்வார்துலுக்கன்பட்டி, ஆவுடையா நாடானூர், ஆனந்தபுரம், இரட்சணியபுரம்(நாலு), இளைய பெருமாள்விளை, உதயநேரி, ஒய்யான்குடி, கச்சனாவிளை, கடையநல்லூர், காடுவெட்டி(உக்), குமாரகிரி, கோமந்தனூர், சிவநாராயனபுரம், சீதாகுளம், சீதாவிளை, சுகன்குடியிருப்பு, செவனைக்காரன்விளை, தர்மநகரம், திருக்கழூர், நல்லதம்பிநாடான்விளை, நொச்சிக்குளம், பட்சேரி(சாத்), பட்சேரி(பன்), பன்றிகுளம்(ஆசீர்), பழங்குளம், பனையடிப் பட்டி, பாகனேரி, பாட்டக்கரை, பிள்ளைவிளை, மருதப்பபுரம், மருதாயபுரம், மருதம்புத்தூர், மாணிக்கபுரம், மேலநகரம், வீராணம், விசுவாசபுரம்(சாத்), விசுவாசபுரம்(போப்).
1835 – அகத்திவேலி, அப்புவிளை ,இலக்கரிவிளை, ஏழாயிரம்பண்ணை, ஓடைமரித்தான், கல்கட்டுவிளை, கல்விளை, கீழக்குளம், கூழையன்குண்டு, சமாதானபுரம் (சுவி), சிங்கிகுளம், சுகநகரம், சௌக்கியபுரம்(சுவி), ராஜகோபாலப்பேரி, டக்கர்புரம், தெய்வநாயகப்பேரி, பாப்பாக்குடி, புதுக்குடி(ஸ்ரீவை), புதூர்(செவ்), லெப்பைக்குடியிருப்பு, வடகரை(மெஞ்), வள்ளியம்மைபுரம், வாகைக்குளம்(மெஞ்), வாகைநேரி.
1836 – இளவரசனேந்தல், சிறப்பூர், சுவிசேஷபுரம், தட்டப்பாறை, பணகுடி, மகிழ்ச்சிபுரம்(போப்), மூன்றடைப்பு, மெய்யூர், ஜோதிநகரம்.
1837 – ஆதாளிகுளம், ஆலங்குளம்(வாகை), சத்தியநகரம், சுப்புலாபுரம், ஞானதீபபுரம், ரெட்டியார்பட்டி(டக்).
1838 & மேற்குப்புதூர்(போப்)
பெரும்பாலுமே நாம் கடந்த 25 வருட காலமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் சுற்றி வருகிறோம்.இதில் உள்ள பல பெயர்கள் நமக்கே தென் பட வில்லை. புரியவில்லை. ஆனால் ஆங்கிலேய பிரசங்கியர் ஒருவர், 19 ஆம் நூற்றாண்டில் போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் அலைந்து திரிந்து 300க்–கு மேற்பட்ட சபைகளை உருவாக்கியிருக்கிறார் என்றால் , அவருடைய செயல் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். தொடர்ந்து நாம் சுத்தமல்லி பாரதியார் நகரில் உருவான அற்புதர் குழந்தை இயேசு ஆலயத்தினை குறித்து காணலாம்.
நீ என்னை மகிமை செய்யச் செய்ய நான் உன்னை மகிமைப்படுத் துவேன் என்ற வார்த் தைக்கேற்ப அற்புதர் குழந்தை இயேசு தன்னை மகிமை செய்கிறவர்களுக்கு பல்வேறு நன்மைகள் நல்கி மகிமை செய்து வருவதுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருஞ்செயல்கள் செய்து ஆசி வழங்கி வருகிறார்.
வளம் கொழிக்கும் வற்றாத ஜீவநதியாம் தன் பொருநை பாயும் நெல்லை சீமையிலே வரலாற்று சிறப்புமிக்க சித்த வள்ளி சதுர்வேதி மங்கலம் மருவிய சுத்தமல்லி பாரதி நக ரில் அமைந்துள்ளது, அற்புதர் குழந்தை இயேசு திருத்தலம். பாளை மறைமாவட்டம் பேட்டை பங்கு தலத்திற்கு உட்பட்ட இப்ப குதியில் சுமார் 40க்கும் மேற் பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் தற்போது வசித்து வருகின்றனர். துவக்க காலத்தில் பேட்டை தென்னிந்திய கூட்டு றவு நூற்பாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் ஏழு பேர் கொண்ட குடும்பத்தினர் பெரியார் நகர், காந்திநகர், பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒன்றி ணைந்து பாரதி நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கூடி ஜெபித்து வந்தனர். இவர்களின் இறைப்பற்றினை கண்டு வியந்த பங்கு தந்தை அதே தனியார் பள்ளியில் வைத்து அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி உதவியதுடன் திருமண காரியங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளையும் நடத்தி வந்தனர்.
இப்பகுதி கிறிஸ்தவர்களின் இடைவிடாத மன்றாட்டு மற்றும் ஜெப வேண்டுதல்களையடுத்து 1968 முதல் 1978 வரை பேட்டையின் இரண்டாவது பங்குதந்தையாக பணியாற்றி வந்த அருட்தந்தை மரியமிக்கேல் அடிகளார் காலத் தில் இரண்டு ஏக்கர் 56 சென்ட் பரப்பளவு கொண்ட இடம் வாங் கப்பட்டது. அதில் ஒரு பகுதியை ஆலய கட்டுமான பணிக்கும் மற்றொரு பகுதியை கன்னியர் மடத்திற்கும் பத்திரப்பதிவு செய் யப்பட்டது. 1986ல் பேட்டையின் 5வது பங்குதந்தையாக பணி யாற்றிய அருட்தந்தை லூர்து ராஜ் அடிகளார் பணிக்காலத்தில் அற்புத குழந்தை இயேசு ஆல யம் எழுப்பப்பட்டு அப்போதைய பாளை. மறைமாவட்ட ஆய ராக அருளாட்சி செய்து வந்த மறைந்த இருதயராஜ் ஆண்டகை யால் அர்ச்சிப்பு செய்யப்பட்டது. அதில் கிறிஸ்தவர்கள் ஒன்று கூடி ஜெபம் செய்து வந்தனர். மாதத்தின் முதல் வியாழக்கிழமை தோறும் மாலை திருப்பலி நடந்தது.
(நதி வற்றாமல் ஓடும்)


