மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு பனை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கத்தை தொடர்ந்து பனை மர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
மதர் சமூக சேவை நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனை மரங்களை வளர்க்க புயல், சூறாவளி, பூகம்பம், மண்ணரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும்,
மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடற்கரை, தீவு, பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரை, ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் விருப்பப்பட்டு கேட்ட தனியாக இடங்களிலும் தன்னார்வமாக, சேவை மனப்பான்மையோடு, அரசிடம் எந்த நிதி உதவியும் பெறாமல் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக பனை மர விதைகளை விதைத்து வருகிறார்கள்.
சாத்தான்குளம் புத்தன் தருவை அருகே உள்ள அதிசய மணல் மாதா கோயில் அரங்கத்தில் வைத்து பனை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது அதனைத் சாலை ஓரங்களில் தருவை மற்றும் தேரி பகுதிகளிலும் பனை மர விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மத்திய பனை வெல்லம் மற்றும் பனை பொருட்கள் நிறுவன மாநில உதவி இயக்குனர் பிரபாகரன் பனை விதைகள் நடும் பணியை துவக்கி வைத்தார். லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ் பானுமதி,
தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் சங்கர் கணேஷ், திருச்செந்தூர் நகர தலைவர் கண்ணன், மற்றும் தமிழரசி உட்பட தன்னார்வலர்கள், சமூக ஆவலர்கள்,
பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்டனர் . மேலும் பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். முன்னதாக மதர் விருட்சம் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர் ஜெயச்செல்வி வரவேற்றார் முடிவில் மதர் அழகு பனை பொருள் உற்பத்தியாளர் குழு தலைவர் ஆலிஸ் மேரி நன்றி கூறினார் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.


