2.
மாட்டிக்கொண்ட பிச்சுமணி
வன்னிய ராஜா கோவிலில் ஆடு கிடா அறுப்பு தலை துண்டாக வெட்டப்படுவதில்லை மாறாக நெஞ்சை கீறி ஈரக் கொலையை எடுத்து படப்பு போடுவார்கள். சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல் படைத்து சாமியாடிகள் அதை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடுவார்கள். சாமி குறி சொல்வதும் வழக்கம்.
அது போன்ற ஒரு திருவிழா இன்று நடைபெறவில்லை. இந்த திருவிழாவே புதையலுக்காத்தான். அது யாருக்கும் புரியவில்லை. குறிப்பாக இங்கு வந்த ராட்டிய கூட்டத்துக்கு தெரியவே இல்லை.
இன்றைக்கு கோயில் கொடையில்லை. கிடா அறுப்பும் இல்லை.
சிறு குருபூஜைக்குத்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பூஜை ஏற்பாடு என்பதை விட கர்ப்பிணி பெண்ணை பலியிடவேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட பூஜை இது.
சாமியாடி எழுந்தார்.
“ஏடே ராட்டிய கூட்டம் வந்திருக்கு. பாவம் நாடோடி கூட்டம். அவுகளுக்கு வயிறார சாப்பாடு போட்டுட்டு நீங்க இரண்டு பேரும் இந்த சாமியாரும் ஊருக்குள்ள வந்திருங்க என்ன?”
என்று கூறிவிட்டு நகர்ந்தார். அவரோடு அங்கிருந்த ஊர் காரர்கள் கூட்டம் எல்லாமே கிளம்பி விட்டது. அந்த கூ இருட்டுககுள் அவர்கள் உருவம் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“என்னமோ டே இந்த ரங்கன் சாம்பானும் முத்துசாம்பானும் தீடீருன்னு இந்த பூஜை ஏற்பாடு பண்ணிருக்கானுவ. எதுக்குன்னே தெரியலை. ஆனாலும் நல்லா வயிறார சாப்பாடு போட்டானுவடே” என்று பூசாரி பேசிய குரல் அப்படியே காற்றோடு காற்றாக கரைந்தது.
தொடர்ந்து கப் சிப் என்று அந்த இடமே அமைதியானது.
ரங்கன் சாம்பானும், முத்து சாம்பானும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர். இவர்கள் இரண்டு பேருக்குதானே தெரியும். தாம் எதுக்கு பூஜை செய்ய போறோம் என்பது.
கோயில் அருகே ஒதுக்கு புறத்தில் ஆற்றுக்கு பக்கத்தில் அந்த மரணகுழி தயராக இருந்தது.
இரண்டு நாளுக்கு முன்பே இந்த இடத்துக்கு முத்தும் ரங்கனும் வந்து விட்டார்கள். உச்சி வெயிலில் இங்கே ஆள் நடமாட்டமே இருக்காது. அந்த சமயத்தில் யாரையும் கூப்பிடாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து அங்கே ஆழமான குழியை தோண்டினர். அதன் மேல் காய்ந்த கம்பு குச்சி வைத்து அதற்கு மேல் காய்ந்த வாழை மடல் வைக்கோல் போன்றவற்றை மேலே பரப்பி வைத்திருந்தனர். அந்த குழி சுமார் 12 அடி பள்ளத்தில் இருந்தது. அதற்குள் தான் கர்ப்பிணி பிச்சிமணியை தள்ளி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர்.
சாம்பார் மணமும், ரசம்பொறியல் மணமும் கும்மென்று இருந்தது. நாக்கு எச்சில் ஊற அந்த ராட்டிய கூட்டத்தினர் வந்தமர்ந்தனர்.
பிச்சுமணி நடக்க முடியாமல் கோயில் வளாகத்துக்குள் வந்தாள். அதன் பின் அவள் சம்மளம் போட்டு இருக்க முடியாமல் ஒரு காலை ஊன்றியபடி அமர்ந்தாள். கர்ப்பிணி பெண் அல்லவா? அந்த உணவு அவளுக்கு எச்சிலை ஊற வைத்தது.
அனைவருக்கும் இலை போடப்பட்டது.
தொடர்ந்து கூட்டு பொறியல் வைக்கப்பட்டது. அடுத்து சாப்பாட்டை முத்து சாம்பவன் வைத்தான்.
“நல்லா சாப்படுங்க. வயிறு முட்ட சாப்பிடுங்க. வன்னிராஜா புண்ணியத்தில எல்லோரும் நல்லா இருக்கணும்”. என்று கூறியவன் பிச்சுமணியிடம் வந்தான். “நல்லா சாப்பிடு தாயி. கர்ப்பிணி புள்ளே. நீ நல்லா சாப்பிட்டு எங்களை வாழ்த்தினாத்தான் உன் புண்ணியத்தில நாங்க நல்லா இருப்போம்” என்றான்.
புன்முறுவல் பூத்தாள் பிச்சுமணி. வயிற்றில் குழந்தை முட்டிக்கொண்டிருந்தது. அந்தவலியை பொறுக்க முடியாமல், அதே நேரம் புன்முறுவல் பூத்தப்படி இருந்தாள். அவளுக்கு எங்கே முத்து சாம்பவனின் சூழ்ச்சி புரிய போகிறது.
அவனின் விஷமத்தனம் புரியாமல் மகிழ்ச்சி பொங்க சாப்பிட்டனர் அந்த கூட்டத்தினர்.
“நல்லா இருப்பீய அய்யா”, கையெடுத்து கும்பிட்டார் ராட்டிய குடும்பத்தின் மூத்தவர்.
Ê”சாமியோ. நல்லா ருசியா இருக்கு. சாமி புண்ணியத்தில நீங்க போட்ட சாப்பாட்டுல. ரொம்ப நாளைக்கு பொறவு எங்க நாக்கு ருசியா சாப்பிடுதோம். உங்க குடும்பம் நல்லா இருக்கணும்.”
“ நாங்க நல்லா இருக்கத்தானே உங்களை இங்க கூப்பிட்டு இருக்கோம்” மனதுக்குள் முத்துசாம்பான் கூறிக்கொண்டான். என்னா வில்லத்தனம்.
எல்லோரும் நன்றாக சாப்பிட்டனர்.
முத்து சாம்பவன், மெதுவாக நகன்று இருட்டுக்குள் சென்றான். போகும் முன்பு ரங்கன் சாம்பவனை பார்த்தான் “ரங்கா. நீ. இங்க பாத்துக்கா. எப்படியும் ராட்டிச்சி இலையை போட வருவா. நீ. அந்த இருட்டை காட்டு. அவளும் இருட்டுக்குள்ள வருவா. நான் அங்க நிப்பேன். அந்த ராட்டிசிய மெதுவா இழுத்துட்டு போய் குழிக்குள்ள தள்ளிடுதேன்”. என்றான்.
ரங்கன் பேயறந்தவன் போல நின்று கொண்டிருந்தான்.
முத்து சாம்பான் அங்கிருந்து இருட்டுக்குள் நகர்ந்தான்.
எல்லோரும் சாப்பிடும் முன்பே பிச்சி மணி சாப்பிட்டு முடித்தாள். அவளுக்கு இயற்கை உபாதம் எடுத்தது. வந்திருந்தவர்கள் எல்லோரும் ஆம்பிள்ளைகள் . ஆகவே தனியாக ஓதுக்கு புறத்துக்கு கிளம்பினாள்.
கையை கழுவி விட்டு, இருட்டுக்குள் நுழைந்தாள்.
அங்கே தாயார் நிலையில் இருந்த முத்து சாம்பவன், அப்படியே பிச்சுமணி வாயில் துணியை வைத்து அழுத்தினான். மறுநிமிடம் திமிறியவளை அலேக்காக தூக்கினான். அவள் கை கால்களை உதறினாள்.
அவளை கட்டி பிடித்து தூக்கி கொண்டு சென்றவன். வாயில் துணியை அழுத்தி விட்டு, கையில் வைத்த துண்டால் வாயை இறுக்க கட்டினான். அதன் பின் புறங்கையை சேர்த்து வைத்து மற்றொரு துண்டால் கட்டினான். தொடர்ந்து அந்த படுகுழியில் அவளை தள்ளினான்.
சர சர வென்று சருகுகள் சத்தம் கேட்க அவள் தலைப்குப்புற உள்ளே விழுந்தாள்.
சத்தமே காட்ட முடியாமல் அவள் அந்த குழிக்குள் என்ன நடக்குது என தெரியாமலேயே விழுந்து விட்டாள்.
முத்து சாம்பவன் கிட்டே போய் பார்த்தான் . இருட்டுக்குள் அவள் விழுந்து கிடப்பதுஇவன் கண்ணுக்கு தெரியவில்லை. அவள் அசைவு மட்டும் தெரிந்தது.
அதன் பின் எதுவுமே தெரியாத படி கூட்டத்துக்கு வந்து விட்டான்.
இதையெல்லாம் அறியாமல் அந்த கூட்டம் கையை கழுவியது. அதன் பின் அவர்கள் பிச்சு மணியை தேடினார்கள்.
அவளை பற்றி எந்த அறிகுறி தெரியவில்லை.
“ஏலே நம்ம பிச்சுமணி எங்க போனா?”.
“தெரியலையே”
முத்து சாம்பவன் சொன்னான், “ஒதுங்க போயிருப்பா. இப்ப வந்திருவா”
ம். இருக்கும் சாமி. எதுக்கும் நான் அவளை கூப்பிடுதேன் என கூறிவிட்டார். “பிச்சு மணி பிச்சு மணி” என்று கூக்குரல் இட்டான் ராட்டிய தலைவன்.
சத்தம் கேட்டு, குழிக்குள் இருந்து தனது கைகட்டை அவிழக்க திமிறினாள் பிச்சுமணி. அந்த முயற்சி வென்றதா?
(தொடரும்)


