எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், பதிப்பாளர், வரலாற்றாய்வாளர், நாடக ஆசிரியர், நடிகர் எனப் பல வெளிகளிலும் தற்போது பயணத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதற்காக நான் போராடியது 36 வருடங்கள். பேருந்து நடத்துனராக வாழ்க்கையைத் தொடங்கி, பத்திரிக்கையாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர் என உயர்ந்திருக்க நான் பட்டபாடு எனக்கு தாமிரபரணி நதி கொடுத்த உற்சாகத்தினால் சுகமாய் மாறியது. தற்போது சாத்தன் ஜமீன்தாரை பற்றிய மனதை உருக்கும் நாவல் ஒன்றை உருவாக்கியுள்ளேன். அதற்கு “மாவீரன் சாத்தன் சாம்பவன்” என பெயர் வைத்துள்ளேன். படியுங்கள் கருத்தை தெரிவியுங்கள் நண்பர்களே அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
1.
புதையலை தேடி
-கூ. இருட்டு.
செக்கச்செவல் என்ற தேரிக்காடு. அருகிலேயே கருமேனியாறு. அந்த பௌர்ணமி வெளிசத்திலும் கருமையான வண்ணத்தில் அந்த ஆறு அமைதியாக கிடந்தது. நிலாவின் வெளித்தல் சில இடங்களில் மிளிர்ந்தாலும் கூட கூ இருட்டு அந்த ஆற்றை கிழித்துக்கொண்டு சென்றது.
அங்கு ஒரு கூட்டம் மெதுவாக நதியின் கரை வழியாக நடந்து வந்தனர்.
சுமார் 25 பேர் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஊசி பாசி விற்பவர்கள்.
“சாமியோ ரொம்ப தூரம் போகணுமோ?”. அதில் முதியவர் ஒருவர் கேட்டார்.
“ஏலே பிச்சிமணி நிறை மாத கர்ப்பிணி அவளை பாத்து கூட்டிட்டு வா வே”
பெரியவர் சொல்லவும்.
அந்த பெண். “அய்யா இன்னும் எவ்வளவு தூரம் போணும். மூச்சி அடைக்கி”.
அவள் நடக்க முடியாமல் நடந்து வந்தாள். மூச்சு வாங்கியது. அடுத்து அவளால் காலை தூக்கி கூட வைக்க முடியவில்லை.
“யய்யா கர்ப்பிணி பெண் கேக்கால. பதில் சொல்லும் ஒரு வாயி சோத்துக்கு இம்பூட்டு தூரம் அலையுணுமா?”
“சும்மா வாவே. உம்ம குடும்பத்துக்கு வயிறாற சாப்பாடு போடுதோமுன்று அந்த சாமி மாரு சொல்லியிருககாவ. சும்மா நடந்து வர மாட்டிய” பெரிசு அதட்டியவுடன் அனைவரும் அமைதியாக நடந்து வந்தனர்.
ஒரு வழியாக அந்த பகுதியில் ஒரு வாய்க்கலை கடந்தனர். அடுத்த படியாக பெரிய குளம்.
பௌர்ணமி நிலா வெளிச்சம்.
செம்மண்தேரியை கடந்து நடந்த அவர்கள் மேல் குளத்தில் நிலா வெளிச்சம் பட்டு அதன் கதிர் வீச்சு இவர்கள் மீது பட்டது.
ஏதோ நடக்கப்போகிறது. பயங்கரமாய் இருந்தது. என்ன நடக்க போகிறது. எதுவும் தெரியவில்லை.
குளத்தினை தாண்டி எங்கோ ஒரிடத்தில் தீபந்தம் தெரிந்தது. அந்த தீப்பந்தம் காற்றில் சுழன்று சுழன்று ஆடியது. Ê காற்று அடிக்கும் சத்தமும் இறைச்சலை ஏற்படுத்தியது.
நரி ஊழையிடும் சத்தம் காதை பிளந்தது. எங்கோ ஆந்தை அலறியது.
“யய்யா பயமா இருக்கு”. பிச்சுமணி முனங்கினாள்.
“அதோ தெரியுது பாரு. அது தான் கோயிலு. செத்தபொறு நாம போயிறலாம்”.
“அய்யா எம்புட்டு தூரம் . ம். கூம் என்னால வர முடியாது”.
குளத்துக்கரையில் அமர்ந்து விட்டாள் பிச்சுமணி.
****
முத்து சாம்பான் பரக்க பரக்க விழித்து கொண்டிருந்தார்.
“ராட்டிய கூட்டம் வருமா? நாம எதிர்பார்த்த படி அந்த கர்ப்பிணி பெண்ணும் வருவாளா?”
கிட்டே வந்தார் ரங்கன் சாம்பான். “என்னடே அந்த கூட்டம் வருமா?”
“வந்துருமுடே”
“நம்பிக்கையா இருக்கேன் எப்படியும் வந்துருவாவ டே”
வச்ச கண் வாங்காமல் கோயில் வாசலை பார்த்துக்கொண்டே இருந்தார்.
கோயிலில் பெரிய கூட்டம் இல்லை.
திறந்த வெளி கோயில்தான். கோயில் சாமிகள் எல்லாம் மண் பூடமாகத்தான் இருந்தது.
பௌர்ணமி நிலா வெளிச்சம் போக இரண்டு தீ பந்தமும் வைத்திருந்தார்கள்.
கோயில் முன்பு கல்தூணில் கண்ணாடிக்குள் விளககு எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கூட அங்குள்ளவர்கள் முகம் தெரியும் அளவுக்கு இருந்தது.
கோயிலும் 25 பேருதான் இருப்பார்கள். அன்னதானம் நடந்து கொண்டே இருந்தது. அன்னதானம் முடிந்த வுடனே பிரசாதத்தினை கொடுத்து ஒவ்வொருவாராக அனுப்பி கொண்டிருககிறார்கள்.
கூட்டம் குறையட்டும். அப்போதான் நாம நினைச்சது நடக்கும்..
தூரத்தில் நாய் ஊளையிடுவதுபோலவே சத்தம் கேட்டது.
“ஏடே அவனுவ வந்துட்டானுவ போலடே !”.
“எங்கடே?
“நாய் குலைக்குதுலா?”.
“சரிடே சாப்பாட போட்டு இங்க இருக்கவியள உடனே அனுப்புவோம்”.
இரண்டு பேரும் இருக்கும் நபர்களை அனுப்ப ஆயத்தமானார்.
சரி. இவர்கள் ஏன் நடுக்காட்டுக்குள் இருக்கும் கோயிலில் ராட்டிய குடும்பத்துக்கு விருத்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருககிறார்கள்.
இவர்கள் யார்?
முத்து சாம்பானும், ரங்கன் சாம்பானும் யார்?.
சாத்தான்குளம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தேரி மணல் படிந்த ஒரு நகரம். இந்த நகரத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் பின்புறமாக ஒரு ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில ஒரு காதல் ராஜ்ஜியம் நிகழ்த்தி உயிரை இழந்த ராஜாவை வணங்கி கொண்டிருககிறார்கள். அவரின் வாரிசுள் கோயிலில் கொடைவிழா நடத்தும் போது ஜமீன்தாரை நினைவு கூறுகிறார்கள். இந்த சாத்தன் ஜமீன்தார் பெயரில் தான் சாத்தான்குளம் என்ற பெயரே இருககிறது. இவரும் இவரது காதல் மனைவி பாப்பாத்தியம்மாளுககும் கோயில் உள்ளது.
இவரின் வாரிசுதான் முத்து சாம்பானும், ரங்கன் சாம்பானும்.
ஜமீன்தார் அரண்மனையில புதையல் இருககு என்பது எல்லோருடைய கருத்து. ஊருககு ஒதுககு புறத்தில் தான் வன்னியராஜா கோயில் இருககிறது. அரண்மனையோட மைய பகுதி. இந்த மைய பகுதியில தான் பொன்னும் பொருளும் இருந்தது என வாரிசுகள் நினைத்தனர்.
அந்த காலத்துல புதையலை எடுக்கணும்னா ஒரு கும்பலே செயல்படும். இதுக்குன்னு தனித்தனியா மந்திரவாதிங்க வேற இருப்பாங்க. எங்கயாவது புதையல் இருக்குன்னு தெரிஞ்சா, அவ்வளவு தான் அந்த இடத்துல முகாம் போட்டுருவாங்க. புதையல எடுக்க நரபலி கொடுக்கவும் தயங்க மாட்டாங்க.
இப்படித்தான் ஜமீன்தார் அரண்மனை அழிஞ்சு போச்சு. ஆனாலும் அங்கே கொப்பரை கொப்பரையா ஐஸ்வரியம் புதைஞ்சு இருக்குன்னு எல்லாரும் நினைச்சு கிட்டு இருந்த காலம்.
ஜமீன்தாருக்கு தூரத்து சொந்தமான இந்த இருவரும் இரண்டு கண்ணும் தெரியாத கேரள மந்திரவாதி கிட்ட போய் நின்றனர்.
“ சாமி ஜமீன்தார் அரண்மனையில் கொப்பரை, கொப்பரையா புதைஞ்சு கிடக்கிற தங்க சாமான் எனக்கு கிடைக்கணும். நீங்க.. ஏவல் எதுவும் பண்ணி எனக்கு புதையல் கிடைக்க ஏற்பாடு செஞ்சு தாங்கன்னு” கேட்டார்கள்.
மந்திரவாதியும் பெரிய பூஜை ஒண்ணுக்கு ஏற்பாடு செஞ்சு முடிச்சாரு. அது முடிஞ்ச பிறகு “இங்க பாருப்பா நீங்கள் இரண்டு பேரும் என் பூஜையை மட்டும் நம்பி இருந்தா போதாது. நிறைமாத கர்ப்பிணி ஒருத்தியை அரண்மனை இருந்த இடத்தில கொண்டு போய் நரபலி கொடுக்கணும். அவ ரத்தம் விழுந்த இடத்தில உனக்கு புதையல் கிடைக்கும்ன்னு” சொன்££ரு. குறிப்பிட்ட நேரத்தில் நானும் வருவேன் என்றார்.
அதுபோலவே தான் இந்த ஊர் ஊரா சுற்றும் ராட்டிய கூட்டத்தில்உள்ள பிச்சுமணி என்ற நிறைமாத கர்ப்பிணி மீது கண் வைத்து அவளை கூட்டத்தோடு கூட்டமாக கூட்டி வருகிறார்கள். அந்த கூட்டத்தினை விரட்டி விட்டு அந்த பெண்ணை நரபலி கொடுகக வேண்டும்.
அந்த இடத்தில் இரண்டு கண்ணும் தெரியாத கேரள மந்திரவாதியும் இருந்தார்.
“என்ன நேரம் போவுது. அந்த கூட்டம் வந்துட்டா?” அவர் சாந்தமாக வெளியே தெரிந்தாலும் கொடுரமான அந்த பூஜைக்கு தாயாராக இருந்தார்.
“கிட்ட வந்துட்டாவ சாமி”.
“சீக்கிரம். சரியா 12 மணிக்கு நாம அந்த சம்பவத்தை பண்ணனும் ரெடியாக இருங்க”.
“சாமி. எனக்கு ஒரு சந்தேகம்”.
“என்ன?”
“கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி அந்த கர்ப்பணி பொண்ணை நரபலி கொடுக்கணுமா?”
“உனக்கு புதையல் வேணுமா? வேண்டாமா?”
“வேணும் ?”.
“அப்படின்னா நிச்சயம் அந்த பெண்ணை நரபலி கொடுக்கணும்”.
இருவர் கண்களிலும் பீதி ஏற்பட்டது.
அந்த சமயத்தில் ராட்டிய கூட்டம் கோயிலுக்குள் நுழைந்தது.
நடக்க போகும் ஆபத்து புரியாமல், சாப்பிட தயாரானாள் அந்த நிறை மாத கர்ப்பிணி பிச்சுமணி
(தொடரும்)


