கருங்குளம் வட்டார வள மையத்தில் வைத்து சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது. இவ் விளையாட்டு விழாவினை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டுவர்ட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், ஆர்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ரெஜினா, இந்து துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை முத்தம்மாள் ஜானகி, சிறப்பு குழந்தைகளுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம் ,ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ் , சிறப்பாசிரியர் ஐடா , சிறப்பாசிரியர்கள் கிரேனாப்பூ , காளியம்மாள், கலைச்செல்வி, நிஷா மேரி ,வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இவ்விழாவில் சிறப்பு குழந்தைகளுக்கென சிறப்பு போட்டிகள் நடைபெற்றன .
சிறப்புக்குழந்தைகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன . சிறப்புக் குழந்தைகள் மகிழ்ந்தனர்.
விழா முடிவில் சிறப்பு குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை ஊராட்சி ஒன்றிய தலைமை ஆசிரியர் சேகர் ஒழுங்குபடுத்தினார்.


