தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 23. 11 .22 முதல் 28 .11 22 வரை நடைபெற்றது. போட்டிகளில் முதன்மை பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு , ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்த பெற்றன . கவின் கலை ,இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய வகைகளில் கலை திருவிழா போட்டிகள் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆகிய 16 பள்ளிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். இப் போட்டிகளில் முதல் நாளான இன்று ஆர்.சி. நடுநிலைப்பள்ளி செய்துங்கநல்லூரில் வைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், வட்டாரக்கல்வி அலுவலர் செல்வகுமார், வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன், செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமார், ராமானுஜம் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரேம குமாரி ,, வட்டார கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சிவசங்கரி ,ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜேந்திரன், வெயில் முத்து, பீபேகம், வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வில்சன் ராஜ் கலந்துகொண்டு கலைத் திருவிழா போட்டி நிகழ்வினை சிறப்பித்தனர். வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் செய்திருந்தார்.*


