கீழ வல்லநாடு இன்ஃபன்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கீழவல்லநாடு இன்ஃபின்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை முகாம் நடந்தது.
இந்த நிகழச்சிக்கு கல்லூரி தலைவர் தலைமை வகித்தார். தேசிய மாணவர் படை கமாண்டர் ஏஆர்.சிங், கமாண்டர் கணேஷ் பில்லா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சங்கர், சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேசிய மாணவர் படை முகாமில் தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் தேசிய பேரிடர் குறித்த பயிற்சி தீயணைப்பு சாதனங்கள் கையாளுதல் பயிற்சி மற்றும் போலி ஒத்திகை பயிற்சி நடந்தது.


