சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கலைத் திருவிழா நடந்தது.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை மூலமாக கலைத் திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றியத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு ஏரல் அருகே உள்ள சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நிகழ்ச்சி நடந்தது.
இந்த போட்டிக்கு நடுவராக சிலிண்டர் குமர குருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் மற்றும் அலுவலகப் பணியாளர் நெல்லையப்பன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பேச்சுப்போட்டி, நடனம், குழுநடனம், மெல்லிசை, இசைக்கருவி வாசித்தல், நாட்டுப்புற பாடல்கள் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


